==== தள்ளுபடி! ====
தன் பையனுக்கு ஒரு இடத்தில் பார்த்துவிட்டு வந்த பெண் பிடிக்கவில்லையென்று அந்த பையனின் அப்பா பெண் வீட்டுக்கு
போன் செய்தார். இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு ஒரு கடிதம்
வந்தது. அந்த கடிதத்துடன் ஒரு பில்!
"உங்களுக்கு எங்கள் பெண் பிடிக்கவில்லை என்பதால், நாங்கள் ஏற்கனவே
தரகரிடம் சொல்லியிருந்தபடி இத்துடன் பில் அனுப்பி யிருக்கிறோம். அன்று நீங்கள்
ஆறு பேர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்ட ஸ்வீட், காரம், காபி, டிபன் வகையறாக்களுக்
கான மொத்த பில் தொகை ரூ 240 ஐ அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,-----. பெண் வீட்டார்
பி.கு: அன்று நீங்கள் எத்தனை பேர், எத்தனை தடவைகள் எங்கள் 'டாய்லெட்'டுக்கு
போனீர்கள் என்பதை நாங்கள் கணக்கு பண்ணத்தவறி விட்டதால், மனித நேயம்
கருதி, அதற்கான கட்டணத்தைத் தள்ளுபடி பண்ணிவிட்டோம்.