தப்பிக்க வழி!
கல்யாண மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடிக்கலேன்னா, (தான் காதலிச்ச பொண்ணை அப்பா, அம்மா வேண்டாம்னு சொல்லிட்டதால அவங்க பாத்த பொண்ணு கழுத்துல தாலி கட்டவேண்டிய அபாக்கியசாலிகள், இந்த காலத்திலும் அப்பா அம்மாவுக்கு அடங்கி நடக்கும் அபிஷ்டுகள் ஆகியோர்) ஒண்ணும் கவலைப்படவே வேணாம்! கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி உங்களை அலங்காரமா கார்லேயோ, குதிரை மேலேயோ உக்காரவச்சி, ஊர்வலம் வுடுறாங்களெ.....அதை ஒரு அதிர்ஷ்ட சான்ஸா பயன்படுத்திக்கலாமே! கார் வேணாம்னு சொல்லிட்டு, குதிரைதான் வேணும்னு அடம் பிடிங்க! குதிரையோட கேரக்டர் தான் உங்களுக்கு புரிஞ்சியிருக்கும். ஊர்வலம் மண்டபத்தைவிட்டு ரொம்ப தூரம் போயிட்டு இருக்கும்போது......போது? என்ன புரியலையா? குதிரையோட விலாவுல செமத்தியா ஒரு உதை!..அவ்வளவுதான்! அது உங்களை சுமந்துக்கிட்டு சிட்டாப் பறந்துடும்! அப்புறமென்ன? அந்த பொண்ணுக்கு தாலி கட்டற ஒரு 'போறாத காலத்துலேயிருந்து" தப்பிச்சாச்சு இல்லையா? (பி.கு: மாப்பிள்ளை ஊர்வலத்துல இந்த சான்ஸை மிஸ் பண்ணிட்டாலும் கவலையில்லை! காசி யாத்திரை போறபோது, வழியில ஏதாவது ஒரு ரோடு ஓரமா இருக்கற 'டாய்லெட்'டுல பூந்து, தப்பிச்சிடலாம்!)
என்ன? இந்த யோசனைக்கு நன்றி சொல்ல உங்க வாய் துடிக்கிதாக்கும்? வேணாம்க! ஏதோ நம்ம ஆண் குலத்துக்கு ஒரு புண்ணியம் செஞ்ச பலன் எனக்கு கிடைச்சா அதுவே போதும்!
> கிரிஜா மணாளன்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home