Wednesday, September 17, 2008

சும்மா சிரிச்சு வையுங்களேன்!

1. ஜட்ஜ் குற்றவாளியைப் பார்த்துக் கேட்டார். "ஏம்பா, மூணாவது தடவையா இந்த கோர்ட்டுக்கு வந்துருக்கீயே......உனக்கு வெக்கமாயில்லே?" குற்றவாளி கேட்டான்: " நீங்க தினமும் வர்றீங்களே...ஒங்களுக்கு வெக்கமாயில்லையா சார்?" ================================================ 2. நண்பன் கேட்டான்: "நேத்து உன் பின்னால 'பைக்'ல உக்காந்து வந்தது...உன் 'லவ்வரா'? "ச்சே! அவ என் ஒய்ஃப்டா!...ஏன் கேக்கறே?" " அவ்வளவு நெருக்கமா உன் இடுப்புல கட்டிப்புடிச்சிக்கிட்டு உக்காந்திருந்ததைப் பாத்துத்தான் கேட்டேன்!" ================================================ 3. அதிகாரி கேட்டார்; "வெள்ளத்தால அந்த கிராமத்துல உயிர்ப்பலி ஆயிடக்கூடாதேன்னு தானே வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகளைப் போடச்சொல்லி அனுப்பினேன்.....எப்படி நாலு உயிர்ப்பலி ஆச்சு?" பணியாள் ஒருவன் சொன்னான்: " அவசரமா மூட்டைகளைத் தூக்கிப்போடறப்ப......வேலை செஞ்சிக்கிட்டுருந்த நம்ம ஆட்கள் மேலேயே தூக்கிப்போட்டுட்டோம் சார்!!" ================================================ 4. பையனின் தந்தையிடம் ஆசிரியர் சொன்னார்: "உங்க பையனோட கையெழுத்தை இன்னிக்கு பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!" பூரிப்படைந்த தந்தை கேட்டார்: " அட! அவ்வளவு அழகா எழுதுவானா!" ஆசிரியர் சொன்னார்: "ஹும், எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு! அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம்னேன்!" ================================================ - கிரிஜா மணாளன்.

Tuesday, September 16, 2008

இதயமார்ந்த நன்றி! 14.09.2008 அன்று சென்னை-அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் சார்பில், பிரபல நகைச்சுவை வேந்தர் திரு. பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நமது நகைச்சுவை வலைத்தளங்கள் சார்பில் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட "சிரிப்போம்! சிறப்போம்!!" என்னும் சிற்றிதழைப் பாராட்டி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியும், தொலைபேசியில் பாராட்டியும் மகிழ்ந்த திரு "பாக்கியம் ராமசாமி' அவர்களுக்கும், மன்ற செயலாளர் திரு எஸ். சம்பது ("சிரிப்பானந்தா') அவர்களுக்கும், மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். - கிரிஜா மணாளன். ===================================================== Dear Manalan, Your periodical on Ambattur Humour Club was very much appreciated by one and all. Thank you for the endevours you are taking every time. About 30 copies were distributed at the meeting. The meeting went very well. - Ja.Ra.Su.(Packiyam Ramasami) =====================================================