Friday, June 20, 2008

கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை

கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை! (இன்று ஜூலை 20 - அவரது பிறந்தநாள்) கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நகைச்சுவையுணர்வு அவருடைய "செப்புமொழிகள்" நூலில் பளிச்சிடுவதைக் காணலாம்.

1 தொலைபேசியைக் கண்டுபிடித்தவன் நமது நன்றிக்குரியவன். நேரில் திட்ட முடி யாதவர்களையெல்லாம் அதன் மூலம் திட்டமுடிகிறது அல்லவா!

2. நான் துறவியாகி, ரிஷிகேசம் போய்விடலாமென்று எண்ணுகிறேன். கூடவே இன்னொரு எண்ணமும் வருகிறது. ..........................எந்தெந்தப் பெண்களை உடன் அழைத்துச் செல்லலாம்?"

3. வயது ஆக ஆக தலைமுடி நரைத்துப் பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!

4. "கடவுள் பன்றியைப் படைத்ததில் அர்த்தம் உண்டு. சில மனிதர்களுக்கு உவமை சொல்ல, அதைவிடத் தோதானது ஒன்றுமில்லை!

-- "மங்களம் மைந்தன்" திருவெறும்பூர், தமிழ்நாடு.