
ரோட்டுல அடிபட்டுக் கிடந்த ஒருவனை நாலு பேர்கள் தூக்கி வந்து எதிரில்
இருந்த ஒரு டாக்டர் வீட்டு வாசலில் படுக்கவைத்துவிட்டு, டாக்டர்
இருக்காரான்னு பார்க்க உள்ளே போனார்கள். ஒருவன் மட்டும் அவன் பக்கத்துல
நின்னுக்கிட்டுருந்தான்.
கொஞ்ச நேரத்துல டாக்டர் வெளியே வந்தார்.
மயக்கமா படுத்துக்கிடந்தவ்னை காணோம்!
டாக்டர் கேட்டார்: "எங்கேப்பா பேஷண்ட்?"
வெளியே நின்னுக்கிட்டுருந்தவன் சொன்னான்: " அவன் எழுந்து ஓடிப்போயிட்டான்
டாக்டர்!"
"ஏம்பா ஓடினான்?"
"மயக்கம் தெளிஞ்சதும் முழிச்சு சுத்து முத்தும் பார்த்தான் டாக்டர்...அதோ
இருக்கற உங்க 'பெயர்ப் பலகை' யைப் பாத்துட்டு....
"ஏன்டா பாவிகளா.....இந்த ஆளுக்கிட்டேயா என்னை தூக்கிக்கிட்டு வந்தீங்க?
அதுக்கு அங்கேயே செத்துப்போயிருப்பேனேடா! .."ன்னு கத்திட்டு, தலைதெறிக்க
ஓடிப்போயிட்டான் டாக்டர்!"
டாக்டர் நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு கீழே சாஞ்சார்.
அவரைத்தூக்கிக்கிட்டு இன்னொரு டாக்டரைத் தேடி ஓடினாங்க அவங்க!
- கிரிஜா மணாளன்.