Monday, May 5, 2008

மாமியார் ப‌டும் பாடு!

மாமியார் ப‌டும் பாடு! ======================== (தோழிகள் இருவர்)
"ந‌ட‌க்க‌க்கூடாத‌து ந‌ட‌ந்துட்ட‌ மாதிரி ஏன்டி க‌வ‌லைப்ப‌டுறே?" "கால் ஒடிஞ்சு ப‌டுக்கையில் கிட‌ந்த‌ என் மாமியார் இப்ப‌ எழுந்து
ந‌ட‌க்க‌ ஆர‌ம்பிச்சுட்டுதேடீ"
# # # # # #
(க‌ண‌வ‌னும், ம‌னைவியும்) "பாத்ரூம்ல‌ பாசி ரொம்ப‌ வ‌ழுக்குதே.... சுத்த‌ம் ப‌ண்ணினா என்ன‌டி?" "உங்க‌ அம்மா ஊருக்கு கிள‌ம்பிப் போன‌ப்புற‌ம் ப‌ண்ணிக்க‌லாமேங்க‌!" # # # # # #
(தோழிக‌ள் இருவ‌ர்)
"என்ன‌டி, உன் பக்க‌த்து வீட்டு பாமாவோட‌ மாமியார் வ‌ந்து
உன்னைத் திட்டிட்டுப் போகுது....என்ன‌டி கார‌ண‌ம்?" "ஊருக்குப் போயிருக்க‌ற‌ என் மாமியார், அது திரும்ப‌ற‌வ‌ரைக்கும்
தின‌மும் என்னைத் திட்ட‌ற‌ பொறுப்பை இதுக்கிட்ட‌ ஒப்ப‌டைச்சுட்டுப்
போயிருக்காம்ட
# # # # # #
(அன்பார்ந்த‌ மாமியார் குல‌மே! இந்த‌ ஜோக்குக‌ளைப் ப‌டிச்சீங்க‌ன்னா,
இதைப்ப‌த்தி உங்க‌ க‌மெண்டை கொடுங்க‌ளேன்!)
>‍ கிரிஜா ம‌ணாள‌ன்

2 Comments:

At May 6, 2008 at 3:51 AM , Anonymous Anonymous said...

தோழரே மிக அற்புதமான ரசித்து ரசித்து சிரிக்கத்தக்க படி நகைச்சுவைகளைப் படைக்கிறீர்கள். என் பாராட்டுகள். அதிலும் நடக்கக் கூடாத மாமியார் நடந்துவிட்டதாகக் கவலைப்படும் மருமகளைப் பற்றிய நகைச்சுவை நினைத்து நினைத்து சிரிக்கத்தக்கது. கற்பனை வானில் பறந்துக்கவிதை எழுதி முடித்த பிறகு மனம் இறுக்கமாக இருக்கின்ற பொழுதுகளில் நிச்சயம் தங்களில் வலைப்பகுதிக்குள் வந்துவிடுவேன். சிரித்து மகிழ்வதற்குத் தான். வாழ்த்துகள்

 
At May 8, 2008 at 10:46 AM , Blogger GIRIJAMANAALAN said...

பாராட்டுக்கு நன்றி நண்பரே! தங்கள் நகைச்சுவை வெண்பாக்களில் மனதைப் பறிகொடுத்தவன் நான். இறுக்கமான இதயங்களே பெருகிவிட்ட இந்த சமுதாய மக்களுக்கு நம்மாலான இலவச மருத்துவம் தான் இந்த நகைச்சுவை! தொடர்வோம்!
அன்புடன், கிரிஜா மணாளன்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home