Monday, May 5, 2008

===========சாதாரணமாவே அப்படித்தான் இருக்கும்! ==========

இந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு மறுநாள் என் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். "என்ன சார்.....புத்தாண்டெல்லாம் கொண்டாடியாச்சா? அன்னிக்கு சமையல்ல கொஞ்சம் கசப்பு சேர்த்துக்கணும்கறதுக்காக, வேப்பம்பூ போடுவாங்களே...உங்க வீட்டுல எப்படி?"அவர் சொன்னார்: "எங்க வூட்டு சமையலுக்கு அது தேவையே இல்லே சார்! ஏன்னா....அவ எப்ப சமைச்சாலும் எல்லா எழவும் கசப்பாத்தான் இருக்கும்!" என்று மனசு நொந்தபடி பேசினார். பாவம், 30 வருஷமா மனைவி சமையலை சாப்பிட்டு உயிர் வாழுற அந்த ஜீவன் எப்படி பொறுமையா காலம் தள்ளுதோ! - கிரிஜா மணாளன்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home