Sunday, May 4, 2008

எனக்குத் தெரியாதாக்கும்!

================ எனக்குத் தெரியாதாக்கும்! =================== கல்யாணப் பந்தியில் எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழும் நேரம். என் பக்கத்து இலைக்காரர் அப்போதுதான் 4ஆவது முறையாக சாம்பார் போடச்சொல்லி வெளுத்துக் கட்டிக்கொண்டி ருந்தார். எழுந்த நான் சும்மா இருந்திருக்கலாம், "என்ன சார், இன்னும் சாம்பார்லேயே இருக்கீங்க? ரசம், மோர் எல்லாமே வந்துட்டுப் போயிடுச்சே!" என்றேன்
"அதப்பத்தி நீங்க ஏன் கவலைப்படறீங்க?........அடுத்த பந்தி வரைக்கும் உக்காந்து சாப்பிடத்தெரியாதா எனக்கு?" என் முகத்தில் சுடச் சுடச் சாம்பாரை ஊற்றின மாதிரி அவரிடமிருந்து பதில்! - "உம்மணாமூஞ்சி"

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home